Thursday 22 May 2014

Yoga Vaashishtaa - Yoga/Meditation/Praanaayaama (b) - 52:

Yoga Vaashishtaa - Yoga/Meditation/Praanaayaama (b) - 52:
All the qualities and practices described earlier prepares one for serious Yoga and what follows. Yoga is a technique for ‘uniting the body and the mind’ for the purpose of realizing the full potential of a human being, who has been endowed with not only a physical body just like other animals, but also possesses ‘ego, mind, intellect and self will to attain the highest goal. As in every aspect of life, to reach the highest level of achievement, one has to make determined and consistent efforts.
Patanjali’s Yoga Saastra stipulates ‘eightfold steps’ known as Ashtaanga Yoga.
These are -
1. Yama - meaning ‘Abstention’: non-violence, non-lying, non-covetous, non-indulgence in sensuality and non-possessivenenss.
2. Niyama -  meaning ‘Observances’: purity, contentment, austerity, study and humility.
3. Aasanaa - meaning ‘Seat’: to be seated in a comfortable cross-legged posture with an erect back and head held high, ready for meditation.
4. Praanaayaama - meaning ‘Control of Breath’:  this is the process of regulating one’s breath, through blocking each nostril, alternately or together to either regulate flow of air through each nostril or to hold the breath, in a measured periodic manner.
5. Pratyaahaara - meaning ‘Abstention’: all that the sense organs are craving for from the external world.
6. Dhaarana - meaning ‘Hold/Concentration’, to focus attention on the chosen object/idea/thought.
7. Dhyaana - meaning ‘Meditation’, intense concentration on the chosen object/idea/thought to the exclusion of all others.  
8. Samaadhi - meaning ‘Trance of Merger with the Infinite’, the final end point where one is in communication with the Supreme Self and in sheer Bliss.
We can understand the power of Meditation through the final goal reached.
The path is strenuous, but with practice, it becomes easier during the succeeding attempts. The beauty of this final state is that having reached this, one’s whole vision of life changes. One is able to ‘see oneself in all’ and all sense and perception of division is gone. The feeling on being One without the Other, gives Peace through elimination of all negative tendencies.
This is true Yoga, not all that is being touted today on the public fora.
We all can attain this and so let us start our journey. (Also, in this context recall chapter 6, Dhyaana Yoga of Bhagawad-Geetaa, where Sri Krishna gives step by step instruction on how to prepare and do Meditation). 
Harih: OM!
Vijendran

Wednesday 21 May 2014

அபிவாதனம் / Abivadaye

Courtesy: Sri.G.Balasubramanian
1. During the time of Abivadaye telling (while doing namaskar to Elders), we do not tell parents names but only the Rishis names.

2. Abivadaye is told not only during Namaskaras to elders but also while doing Sandya vandana etc. Why? It is to constantly remember our hoary tradition and thank all the Rishis.

3. Rishis are seers who saw the effects of not only the Mantras but also the associated rituals and practices. Hence we follow them.

4. Brugu, Angiras, Mareechi, Atri, Jamadagni, Gowthama, Bharadwaja, Kasyapa, Vasishta, Agastaya, Viswamitra are supposed to be main Gotra Rishis. Their name will occur in the pravara of all Abivadaye.

5. Abivadaya is told by the doer. Pravara is told by the by the Acharya who is getting it done. For example during the marriages the Gotra and names of two gg and  grand fathers is told in detail for the girl and the boy.

6. Bodayana has listed 49 prominent existent Gotras.

7. Marriage should not happen within same Gotras.

8. A person who does not not know the names etc of the earlier 3 generations should not be engaged in Marriage relations. He should not be called for Shradda etc.

9. Abivadaye should not be done for Sanyasis, those who are impure, to women, to those who do not know how to bless the Namaskara doer.

ஏன் பெரியவர்களுக்கு அபிவாதயே சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்?

அபிவாதனம் செய்யும் சமயத்தில் தாத்தா-கொள்ளுத்தாதா எல்லாம் வருவதில்லை. வேதகாலத்து 
ரிஷிகள், அதுவும் குறிப்பிட்ட கோத்திரத்தின் மூல புருஷர்கள் எனப்படும் ரிஷிகளது பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. அவரவர் குல முதல்வர்கள் என்னும்படியான ரிஷிகளைச் சொல்லி அவர்களது வழியில், இந்த 
கோத்திரம்-ஸூத்ரம் சார்ந்த நான் வணங்குகிறேன் அப்படின்னு சொல்லுகிறோம்.

அபிவாதனம் செய்வதன் மூலம் நாம் நமஸ்காரம் செய்பவருக்கு நம்மைப் பற்றிய ஒருவித வைதீக 
அறிமுகம் செய்துகொள்கிறோம். இதைச் சொன்னால் இன்றைய தலைமுறை எதற்கு 
சந்தியாவந்தனத்திலும், நமது கோத்ரம்-ஸூத்ரம் தெரிந்தவர்களுக்கும் இதைச் 
சொல்லவேண்டும் என்று இன்றைய சிறுவர்கள் கேள்வி கேட்பார்கள்.

சாதாரணமாக கோவிலில் ஒரு அர்ச்சனை செய்தாலேயே அதில் நமது கோத்ரம், பெயர் சொல்லிச் 
செய்கிறோம். அதாவது கோத்ரம்+பெயர் ஒரு யூனிக் ஐடண்டிட்டி [ஓட்டர் ஐடி, பான் கார்ட் போல] தந்து அதனைச் சொல்லுவதன் மூலமாக கர்மாவினது/அர்ச்சனையின் பலன் நம்மை அடையச் செய்கிறது. இது போன்றே இந்த கோத்ரம்+ஸூத்ரத்தை சார்ந்த நான் உன்னை வணங்குகிறேன் என்று 
சந்த்யா தேவதை-சூர்யனை வணங்குகிறோம்.

நம்பிக்கை என்பது இருக்குமானால் அது மந்திரத்தின் மீது மட்டுமல்லாது, முழுச் 
சடங்கின் மீதும் இருக்க வேண்டும். மந்திரத்தை நம்புவோமானால், அதைத் தந்த 
நமது ரிஷிகள் பெயரைச் சொல்ல யோசனை ஏன் என்று கேட்க வேண்டும். மற்ற 
செயல்களின்றி மூல மந்திரத்தை மட்டும் நான் ஜபம் செய்கிறேன் என்பது தவறு என்று குழந்தைகளுக்குப் புரியச் செய்ய 
வேண்டும். அபிவாதனத்தில் ரிஷிகளது பெயரைச் சொல்லுவதன் மூலமாக குல 
முதல்வர்களான ரிஷிகளை அவ்வப்போது நினைவில் கொண்டு வந்து, அவர்களது அளப்பரிய செயல்களை நமது மனதில் கொண்டு வருவதன் மூலம் நாமும் நமது செயல்களை 
நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணம். இவ்வாறு மூல 
ரிஷிகளது வரலாற்றை நாம் முதலில் தெரிந்து கொண்டு உபநயன காலத்தில் சிறுவர்களுக்குச் சொல்லித் தர 
வேண்டும்.

"ரிஷி"
என்ற சொல்லுக்கு 'பார்ப்பவர்' என்ற பொருளுண்டு. சாதாரணமாக நம்மால் பார்க்க
முடியாதவற்றையும் தமது தபோ-பலத்தால் ப்ரத்யக்ஷமாகவும், தமது அனுபவத்தாலும்
அறிந்து அதனடிப்படையில் தமது கர்மாக்களை வகுத்துக்கொண்டு அதனடிப்படையிலேயே
வாழ்ந்தவர்கள். அவர்களது வழி வருபவனான நான் உங்களை நமஸ்கரிக்கிறேன் என்று
சொல்லுவதே அபிவாதனம்.

அபிவாதனம் செய்கையில் சொல்லும் மந்திரத்தில் சொல்லுவது நமது கோத்ரம், ப்ரவர ரிஷிகள், நமது ஸூத்ரம் மற்றும் நமது சர்மா நாமா ஆகியவை மட்டுமே. இவற்றில் கோத்ரம் 
என்பது என்ன?, ப்ரவரம் என்பது என்ன என்று பார்க்கலாம்.

ஆபஸ்தம்பர், போதாயனர் போன்ற மஹரிஷிகள், கோத்ரம் என்ற பதத்திற்கு 
வம்சம், சந்ததி, குலம், பரம்பரை ஆகியவற்றையே பொருளாகச் 
சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. கோடிக்கணக்கான கோத்ரங்கள் 
இருப்பதாக ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறதாம். அவற்றில் தற்போது 
இருப்பவை என்பதாக 49ஐ போதாயனர் வரிசைப்படுத்தியிருக்கிறார்.

'அபிவாதயே' என்று ஆரம்பித்தவுடன் அவரவர் கோத்ரத்திற்கான மூல ரிஷிகளின் 
பெயரைச் சொல்லுகிறோம், அவர்கள் அந்த கோத்ரத்தின் ரிஷிகள். யாரெல்லாம் கோத்ர
ரிஷிகள் என்றால், மொத்தம் பத்து பெயர்களை கோத்ர ரிஷிகளாக ஸ்மிருதியில் 
சொல்லியிருக்கிறார்கள். சில ஸ்மிருதிகளில் எட்டு (8) என்றும், சிலவற்றில் 
பத்து (10) என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாக தெரிகிறது.

ப்ரும்மாவின்
புத்ரகளான,ப்ருகு, அங்கிரஸ், மரீசி, அத்ரி ஆகிய நால்வர் மற்றும் 
இவர்களில்,ப்ருகுவின் புத்ரரான ஜமதக்னி, அங்கிரஸரின் புத்ரகளான கெளதமர், 
பரத்வாஜர், மரீசியின் புத்ரரான கஸ்யபர், வஸிஷ்டர், அகஸ்தியர் மற்றும் 
அத்ரியின் புத்ரரான விஸ்வாமித்ரரும் கோத்ர ரிஷிகளில் வரும் மூலவர்கள்.

கோத்ர ரிஷிகள் 8 என்று சொல்லும் ஸ்மிருதிகள், மேற்சொன்ன புத்ரர்களான 7 
நபர்களையும், அத்ரியையும் சேர்த்து 8 ரிஷிகளாக குறிப்பிட்டுள்ளதாகச் 
சொல்லுகிறார்கள். ப்ருகு மற்றும் அங்கிரஸ் ஆகிய இருவர்கள் பற்றி 
ஸ்மிருதிகளில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறதால் அவர்களையும் சேர்த்து 10 
ரிஷிகள் என்பதாக சில ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக யார் எந்த 
கோத்ரத்தைச்
சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த 10 ரிஷிகளில் ஒருவராவது அபிவாதனத்தில் 
வரும் ரிஷிகளாக இருப்பார்கள். இவ்வாறு இருப்பதால் இவர்கள் கோத்ர ரிஷிகள் 
என்றும் பெயர் வந்தது.

திருமணம் மற்றும் மஹா யாக, யஞ்யாதிகள் செய்யும் சமயத்தில் ஹோதாவும், 
அத்வர்யுவும் அக்னியிடத்தில் ப்ரார்த்தனை செய்கையில் 'இந்த ரிஷியின் 
வம்சத்தைச் சார்ந்தவர் யாகம் செய்கிறார் என்று கூறி விசேஷமாகப் பிரார்த்தனை
செய்கிறார்கள். இன்றும் திருமணங்களில் கன்னிகா தானத்திற்கு முன்பாக இந்த 
கோத்ரம், ஸூத்ரத்தைச் சார்ந்த, இந்த ரிஷிகள் வழிவந்த இன்னாருடைய
பெளத்ரன்/பெளத்ரி, இன்னாருடைய புத்ரன்/புத்ரிக்கு என்று கூறுவதைக் 
காண்கிறோம். இவ்வாறாக அறிவித்தலே ப்ரவரம் சொல்லுதல் என்பது. ஆக, அபிவாதனம் 
என்பதே ப்ரவரம். அபிவாதனம் செய்கையில் ரிஷிகளது பெயரும் கர்மா செய்பவர் 
பெயரும் வரும், ஆனால் ப்ரவரத்தில் கர்மா செய்பவரது பாட்டனார் , 
முப்பாட்டனார் (பிதா, பிதாமஹன், நப்தா) பெயரும் வரும். அபிவாதனம் செய்பவரே 
சொல்லுவது; ப்ரவரம்
என்பது செய்து வைக்கும் ஆச்சார்யார் சொல்லுவது.

இவ்வாறு சொல்லப்படும் ப்ரவரத்தில் வரும் ரிஷிகள் அவரவர் கோத்ர 
ரிஷிகளே!, அக்னியிடத்து ப்ரார்த்தனை செய்கையில், மூல ரிஷிகளான மந்த்ர 
த்ருஷ்டாகளது வம்சத்தவர் என்று கூறுவதால் அக்னி மகிழ்வடைவதாக தர்ம 
சாஸ்த்ரம் சொல்லுகிறது. 
(1) Abivathaye,
(2) _______ _______ ______ (Names of respective Gothra Rishis, as
applicable as one, two, three, five or seven Rishis from the table given
below)
(3) ____________ (Choose one as applicable »Eka Risheya,
»Dhwayarsheya, »Thrayaa Risheya, »Pancha Risheya, »Saptha Risheya),
(4) Pravaraanvitha:
(5) _______________ Soothra (Abasthampa Soothra/ Bhodhayana
Soothraa),
(6) _______________ (Yaajusha/Samo/Rg) Gaathyaathi
(7) ________________ Gothrasya
(8) ______________________ (your name)
(9) sarmaNa: aham asbibho.
ஏன் இப்படி கோத்ரங்களை/ப்ரவரங்களைச் சொல்லுகிறோம் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில;

1. ஸகோத்ரத்தில் பெண் எடுக்க/கொடுக்கக் கூடாது - திருமணங்கள் இன்று 
நடப்பது போல முன்பில்லை. சிறு வயதில் உபநயனம் செய்வித்து பால்ய விவாஹம் 
செய்வது அக்காலத்தைய வழக்கம். அதனால் ஒரு பிரம்மச்சாரி அபிவாதனம் 
செய்கையிலேயே அவனது கோத்ரம் தெரிந்து கொண்டு பெரியவர்கள் அவனுக்கு தகுந்த 
வரனை நிச்சயிக்க உதவியிருக்கிறது. இது தவிர திருமணங்களில் ஸபையில் 
இருப்பவர்கள் வது-வரன்
ஆகியோரது கோத்ரங்களை அறியச் செய்ய ப்ரவரம் உதவுகிறது.

2.
குறிப்பிட்ட சில கோத்ரத்தைச் சார்ந்தவர்களுக்கு அவர்களது கர்மாகளில் 
சிற்சில வேறுபாடுகள் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறான வேறுபாடுகளை அறிந்து 
செய்து கொள்ள, செய்து வைக்க கோத்ரம்-ப்ரவரம் உதவுகிறது

3. வயதில் பெரியவர்கள், அத்யயனம் செய்தவர்கள் முன்னிருக்கும் போது 
சிறியவர்களது ஜீவன் நிலையில்லாது இருக்குமாம், அவ்வாறு இருப்பதைத் 
தவிர்க்கவே பெரியவர்களைக் கண்டதும் அவர்களுக்கு நமஸ்காரம்.

4. பெரியவர்களுக்கு அபிவாதனம் செய்வதால் ஒருவனுக்கு ஆயுசும், ஞாபக சக்தியும், கீர்த்தியும், நல்ல மனோபலமும் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.

5. தனக்கு முந்தைய 3 தலைமுறைகள் பற்றித் தெரியாதவனுக்கு பெண் கொடுப்பது, 
ஸ்ராத்தத்தில் வரிப்பது போன்றவை கூடாது, ஆகவே அபிவாதனம்-ப்ரவரம் போன்றவை 
முக்கியம்.

எங்கே, யாருக்கு அபிவாதனம் செய்யக்கூடாது என்பதும் ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அவை;

1.
தீர்த்த பாத்திரம், புஷ்பம், ஜபம், ஹோமம் போன்றவை செய்யும் போதும் 
அபிவாதனம் செய்யக்கூடாது. ப்ரேத்/பித்ரு கர்மாகள் செய்கையில் பூணூலை வலம் 
மாற்றிக் கொண்டே அபிவாதனம் செய்ய வேண்டும்

2. ப்ரத்யபிவாதனம் செய்யத் தெரியாதவர்களுக்கு (ஸ்மிருதியில் சொல்லியபடி 
ஆசிர்வாதம் செய்யத் தெரியாதவர்களுக்கு) அபிவாதனம் தேவையில்லை, வெறும் 
நமஸ்காரம் மட்டும்.

3. ஸன்யாசிகளுக்கு அபிவாதனம் கூடாது.

4. தம்பதிகளில் பெண்க்ளுக்கு மட்டும் நமஸ்காரம் செய்கையில் அபிவாதனம் கிடையாது.

5. ஆசாரமில்லாதவனுக்கு அபிவாதனம் கூடாது, ஆச்சாரமில்லாத காலத்தில் அபிவாதனம் இல்லாது நமஸ்கரிக்கலாம்

தினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி 23



எந்த ஒரு மந்திரத்தையும் நடக்கும்போதோ,பயணிக்கும் போதோ ஜபிக்கவே கூடாது;மந்திரங்களில் இல்லறத்தார் ஜபிக்க வேண்டிய மந்திரங்கள்,துறவறத்தார் ஜபிக்க வேண்டிய மந்திரங்கள் என்று ஏராளமான உட்பிரிவுகள் இருக்கின்றன;
நாம் ஜபிக்கும் மந்திரமானது நமக்கு பலன் தர வேண்டும் எனில்,அதை நமது வீட்டு பூஜையறையில் மஞ்சள் துண்டு விரித்து அதன் மீது அமர்ந்து,கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்க வேண்டும்;வேறு எந்த விதத்திலும் ஜபிக்கக் கூடாது;அப்படி அமர்ந்து ஜபிக்கும்போது,நமது உடல் பகுதி மஞ்சள் துண்டைத் தாண்டி வெளியே நீட்டிக் கொண்டு(தரையில் படுமாறு) இருக்கக்கூடாது;அப்படி இருந்தால்,நாம் ஜபிக்கும் ஜபத்திற்கான பலன் நமது சூட்சும உடலில் சேகரம் ஆகாமல் பூமிக்குள் போய்விடும்;

நாம் ஜபிக்கும் மந்திரத்தை முறைப்படி,குருவின் தீட்சை பெற்றப்பின்பே ஜபிக்க வேண்டும்;மனதைத் திற(ட)ப்படுத்துவது எதுவோ அதுவே மந்திரம் எனப்படும்.மந்திரம் என்ற வார்த்தைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கின்றன.வீட்டிற்கும் மந்திரம் என்ற அர்த்தம் உண்டு;
ஒருபோதும் நாம் இன்னொரு மனிதனை தாண்டிச் செல்லக் கூடாது;மிதிக்கக் கூடாது;தெரியாமல் நமது கால் அடுத்தவர் மீது பட்டாலும்,உடனே அவர் உடலைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்;இதன் மூலமாக,நாம் அவரது ஆத்மாவிடமும்,அந்த ஆத்மாவுக்குள் சூட்சும ஒளியாக இருந்து இயக்கும் சிவசக்தியிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்றே பொருள்;

இன்னொருவர் பயன்படுத்திய ஆடை,செருப்பு போன்றவைகளைப்பயன்படுத்தக் கூடாது;

குமரி,நெல்லை மாவட்டங்களில் சாப்பிட்டதும்,அந்தத் தட்டிலேயே கை கழுவும் பழக்கம் கிடையாது;ஏனெனில்,அன்னத்தை சுமக்கும் தட்டும் மஹாலக்ஷ்மியின் அம்சமாக இருப்பதால்,அதிலேயே கை கழுவினால் மஹாலஷ்மியை அவமதிப்பதாக அர்த்தம்;முடிந்தால் நாமும் இந்தப்பழக்கத்தைப் பின்பற்றலாமே!
தென்மாவட்டங்களில் அண்டைவீட்டினர்,தனது பக்கத்துவீட்டினரிடம் ஒரு மளிகைப்  பொருளைக் கேட்கும்போது,அது இல்லையெனில்,அந்த பக்கத்து வீட்டினர் இல்லை என்று கூறமாட்டார்கள்;நிறைஞ்சிருக்கு என்று கூறுவார்கள்;என்ன ஒரு உயர்வான சிந்தனை!

அடிக்கடி இல்லை;முடியாது;தெரியாது;பிரச்னை என்று நாம் பேசினால் அது நமது ஆழ்மனதினுள் புகுந்து வேலை செய்யத் துவங்கும்;அதனால் தான் ஒருபோதும் கெட்ட சொல் சொல்லாமலிருக்க நமது முன்னோர்கள் வலியுறுத்தி வந்தனர்;

புதிய கோவில்கள் கட்டுவதை விடவும்,பழைமையான ஆலயங்களை புனர்நிர்மாணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும்;ஒருவருக்கு சிவாலயம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உண்டாவது நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் அரிதிலும் அரிதானதாகும்;சிவமஹாபுராணம் வாசிக்கும் எண்ணம் வருவதும் அரிதிலும் அரிதாகும்;சிவாலயத்தின் உழவாரப்பணியைச் செய்தாலே நமது பலகர்மவினைகள் நீங்கும்;தோஷங்களைச் சரி செய்யவே துல்லியமான பரிகாரத்தை நாமே செய்ய வேண்டும்;பரிகாரம் என்பது நமது சிரமம் நிறைந்த வாழ்க்கையைச் சீரமைக்க உருவாக்கப்பட்டவை;(சிவாலயத்தினுள் இருக்கும் குப்பையை அள்ளிக்கொண்டு வந்து கோவிலுக்கு வெளியே வெகுதூரத்தில் கொட்டுவதும் ஒருவிதத்தில் புண்ணியத்தைத் தரும்; பிரதோஷ நேரத்தில் சிவமந்திரங்கள் அடங்கிய புத்தகத்தை இலவசமாக விநியோகம் செய்வதும் ஒருவித புண்ணியமே! வளர்பிறை அஷ்டமி பற்றிய விழிப்புணர்ச்சியை கோவிலுக்கு வருபவர்களிடம் உருவாக்குவதும் ஒருவித புண்ணியச் செயலே!!)

ஒவ்வொரு குடும்பத்திலும் குடும்ப நூலகம் ஒன்றை அமைப்பது அவசியம்;சில பத்தாண்டுகள் முன்புவரையிலும்,ஒவ்வொரு குடும்பத்திலும் ஆன்மீக நூலகம் இருந்திருக்கிறது;அதில் பழமையான ஆன்மீக,ஜோதிட,மருத்துவ நூல்கள் இருந்திருக்கின்றன;இந்த நூல்கள்,பரம்பரையாக அந்தக் குடும்பத்தில் ஒருவரை ஜோதிடராகவும்,ஒருவரை வைத்தியராகவும் ஆக்கியிருக்கின்றன;(இந்த நூற்றாண்டுக்கு முன்பு,ஒவ்வொரு குடும்பத்திலும் ஏராளமான ஓலைச்சுவடிகள் இருந்துள்ளன)தற்காலத்தில் அப்படிப்பட்ட புராதனமான நூல்கள் அனைத்துமே பழைய புத்தகக்கடைகளில் புதைந்து இருக்கின்றன;இதுபற்றிய அடிப்படை ஞானம் கூட நம்மில் பலருக்கு இப்போது இல்லை;

அவதானம் என்றால்,கவனக் குவிப்பு என்று அர்த்தம்;த்ரி அவதானம் என்றால்,ஒரே நேரத்தில் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்துதல் என்று அர்த்தம்;அதாவது நீங்கள் இந்த கட்டுரை வாசிப்பது ஒரு கவனக் குவிப்பு;அவ்வாறு வாசித்துக் கொண்டே உங்கள் செல்போனில் ஒரு எஸ்.எம்.எஸ்ஸை டைப் அடிப்பது இரண்டாவது கவனக் குவிப்பு;அவ்வாறு செய்து கொண்டே பக்கத்துவிட்டில்/அடுத்த அறையில் இருக்கும் டிவி சப்தத்தைக் கவனிப்பது மூன்றாவது கவனக் குவிப்பு;இப்படி ஒரே நேரத்தில் முன்று விஷயங்களில் கவனம் செலுத்துதல் த்ரி அவதானம் என்று பெயர்;

அஷ்ட அவதானம் என்றால் ஒரே நேரத்தில் எட்டு விஷயங்களில் கவனம் செலுத்துதல் என்று பெயர்;போராளி என்ற திரைப்படத்தில் இதை காட்சிப் படுத்தியுள்ளனர்;தச அவதானம் என்றால் ஒரே நேரத்தில் பத்து விஷயங்களில் கவனம் செலுத்துதல் என்று பெயர்;இதே போல சோடேச அவதானம் என்றும்,சத அவதானம் என்றும் நமது முன்னோர்களிடம் மனத் திறமைகள் இருந்திருக்கின்றன;சோடேச அவதானம் என்றால் ஒரே நேரத்தில் 16 விஷயங்களில் கவனம் செலுத்துதல்;சத அவதானம் என்றால் ஒரே நேரத்தில் 100 விஷயங்களில் கவனம் செலுத்துதல்;நமது தமிழ்நாட்டில் 1950 வரையிலும் சத அவதானிகளும்,சகஸ்ர அவதானிகளும் வாழ்ந்திருக்கிறார்கள்;(சகஸ்ர என்றால் ஆயிரம் என்று பெயர்)

அசைவம் சாப்பிடுவதையும்,மது அருந்துவதையும் நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு,மஞ்சள் நிற பட்டு ஆடையை வாரம் ஒருமுறை அணிபவர்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து படிப்படியாக மீண்டுவிடுவார்கள்;